இரண்டாம் உலக’த்தில் அனிருத்!

இரண்டாம் உலக’த்தில் அனிருத்!

Published on

’இரண்டாம் உலகம்’ படத்திற்கு பின்னணி இசையினை அனிருத் அமைக்கயிருக்கிறார் என்பது தான் சூடான செய்தி.

செல்வராகவன் இயக்கிவரும் மெகா பட்ஜெட் படம் ‘இரண்டாம் உலகம்’. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகி வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

செல்வராகவன் படங்களின் பின்னணி இசைக்கு என்றே ஒரு ரசிகர்கள் வட்டம் உண்டு. ‘இரண்டாம் உலகம்’ படத்திற்காக செல்வராகவன் முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்தபோதே படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.

நீண்ட கால தயாரிப்பு, மெகா பட்ஜெட் படம் என்பதால் படத்தினை சீக்கிரம் வெளியிட வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கனவே ‘என்றென்றும் புன்னகை’, ‘இது கதிர்வேலன் காதல்’ என ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து பணியாற்றி வருவதால், ’இரண்டாம் உலகம்’ படத்தின் பின்னணி இசைக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

உடனே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் செல்வராகவன், அனிருத்தை சந்தித்து படத்தின் பின்னணி இசையினை முடித்து தரும்படி கூறியிருக்கிறார்கள். அவரும் மெகா பட்ஜெட் படம் என்பதால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆர்யா, அனுஷ்கா, இயக்குனர் செல்வராகவன், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என இதுவரை இணையாதவர்கள் இப்படத்திற்காக இணைந்திருப்பதால் படத்திற்கு ஏகத்திற்கும் எதிர்பார்ப்பு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in