

தென்னிந்தியாவில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் கிடைப்பது கடினம் என்று நடிகர் சமந்தா கவலை தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. 'கத்தி', 'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்', 'மனம்', '24', 'ஜனதா கரேஜ்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் நிறைய படங்களில் தொடச்சியாக நடித்துவிட்டதால், சில காலம் ஒய்வெடுக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். தற்போது, "தென்னிந்தியாவில் ஒரு நடிகைக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறேன்.
நான் நிறையப் படங்களில் ஒப்பந்தமாகாததற்குக் காரணம் நல்ல வாய்ப்புகள் வராததே.. இதை கனத்த மனதுடன் சொல்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சமந்தா.
விரைவில் நாகார்ஜூன் மகன் நாக சைந்தன்யா உடன் திருமணம் செய்யவிருக்கிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.