

தமிழ்நாடு திரைப்பட தயாரிப் பாளர் சங்கத் தலைவர் கேயார், சங்கச் செயலாளர்கள் டி.சிவா, ஞானவேல்ராஜா உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
தமிழ்த்திரைப்பட உலகின் சூழலில் சிறு முதலீட்டு படங் களை வெளியிட முடியாமல் பல தயாரிப்பாளர்கள் சிரமத்திற் குள்ளாகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ‘அம்மா திரையரங்கம்’ அமைக்கப்படும் என்கிற செய்தி, திரைத் துறையினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முதல்வருக்கு நன்றி கூறிக்கொள் கிறோம்.
இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ள அதே நாளில், தயாரிப் பாளர் சங்க நிர்வாகிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 வழக்குகள் மீதான மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பினால் தமிழ்த்திரைப்பட சங்க உறுப்பினர்கள் எண்ணற்ற நன்மைகளை பெறுவார்கள்.
படங்களை வெளியிடுவதை முறைப்படுத்த தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திட்டமிட்டுள் ளோம். குறிப்பாக சிறிய பட்ஜெட் படங்களுக்கு ரிலீஸ் தேதி முறைப்படுத்துதல் திட்டம் பொருந்தாது. அதேபோல பட விளம்பரங்களையும் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.