

3 நாட்களில் 6 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதால் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
புதுமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
தமிழகமெங்கும் மே 19ம் தேதி வெளியான இப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 3 நாட்களில் 6 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
இதனை பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.