

விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகியுள்ள 'இவன்வேற மாதிரி' படத்திற்கு 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
விக்ரம் பிரபு, சுரபி, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்க, 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கியிருக்கும் படம் 'இவன் வேறமாதிரி'. லிங்குசாமி தயாரித்திருக்கும், இப்படத்தினை யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.
'கும்கி' படத்திற்கு வரவேற்பைத் தொடர்ந்து விக்ரம் பிரபு, 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குநர் சரவணன் இணைந்திருப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கும், டிரெய்லருக்கு இணையத்தில் வரவேற்பு பெற்றிருக்கிறது.
டிசம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது யு.டிவி நிறுவனம். இந்நிலையில், இன்று இப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்கச் சொல்லாமல் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
இதனால், படக்குழு உற்சாகத்தில் இருக்கிறது. டிசம்பர் 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறது யு.டிவி நிறுவனம்.