

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, 'கிடாரி' செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'வெற்றிவேல்' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் படம் 'கிடாரி'. புதுமுக இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிகிலா விமல், சுஜா வருணீ, நெப்போலியன், வேலார் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். தர்புக சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
கோவில்பட்டி மற்றும் சாத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடித்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்தில் இருக்கும் வன்முறை காட்சிகளை கணக்கில் கொண்டு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு. அதனைத் தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் இயக்குநர் சசிகுமார்.
இப்படத்தோடு இதுவரை எந்தவொரு படமும் தங்களுடைய வெளியீட்டை உறுதிசெய்யாத காரணத்தால், அதிக திரையரங்குகளில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.