

'முனி - 3' படத்தில் அஞ்சலி வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'முனி', 'காஞ்சனா (முனி - 2)' ஆகிய படங்களின் தொடர்ச்சியாக 'முனி - 3' இயக்கி வருகிறார் லாரன்ஸ். 'காஞ்சனா' பெரும் வரவேற்பை பெற்றிருப்பதால், 'முனி - 3' படத்தினை ஏகத்திற்கும் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மிகவும் பொருமையாக இயக்கி வருகிறார் லாரன்ஸ். லாரன்ஸ், டாப்ஸி, அஞ்சலி, சாம்ஸ், மனோ பாலா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்து வந்தார்கள். அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும், கால்ஷீட் கிடைக்கும் போது எடுத்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தார்.
ஆனால், அஞ்சலி எப்போது தமிழ்நாட்டிற்கு வருவார் என்பது புரியாத புதிராக இருப்பதால் அவரது வேடத்திற்கு நித்யா மேனனை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது இயக்கி கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் நித்யா மேனன், உடல் ஊனமுற்ற பாத்திரத்தில் நடித்து வருகிறாராம். அதுமட்டுமன்றி 'காஞ்சனா' என்ற தலைப்பை போன்று, இப்படத்திற்கு 'கங்கா' என்று தலைப்பிட்டு இருக்கிறாராம் லாரன்ஸ்.