காற்று வெளியிடை முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

காற்று வெளியிடை முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

மணிரத்னம் இயக்கத்தில் ஊட்டியில் தொடங்கப்பட்ட 'காற்று வெளியிடை' முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது.

கார்த்தி, ஆதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'காற்று வெளியிடை'. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கப்பட்டது. கார்த்தி, ஆதித் ராவ், ஷரதா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டவர்கள் அடங்கிய சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார் மணிரத்னம்.

'காற்று வெளியிடை' அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது, "ஆகஸ்ட் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும். சென்னையில் ஒரு பாடலையும், சில காட்சிகளை படமாக்க இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.

இப்படத்தின் கார்த்தி பைலட்டாகவும், ஆதிதி ராவ் மருத்துவராகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in