மே 12-ம் தேதி வெளியாகிறது உள்குத்து

மே 12-ம் தேதி வெளியாகிறது உள்குத்து
Updated on
1 min read

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் நடித்திருக்கும் 'உள்குத்து' திரைப்படம் மே 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'திருடன் போலீஸ்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் தினேஷ் நடிக்க 'உள்குத்து' படத்தைத் தொடங்கினார் கார்த்திக் ராஜு. நந்திதா, திலீல் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் தினேஷுடன் நடித்துள்ளார்கள்.

பிரமோத் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். செல்வகுமார் தயாரித்திருந்தார். ஆனால், பணத் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் விட்டலுக்கு முழுப்படத்தையும் கொடுத்துவிட்டார்.

விட்டல் கைக்கு மாறியதால் இப்படத்தின் பிரச்சினைகள் அனைத்துமே முடிவுக்கு வந்தன. தற்போது மே 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தை அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in