

கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினை திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கிய படம் 'சூது கவ்வும்'. சி.வி.குமார் தயாரித்திருந்தார். வித்தியாசமான கதைக்களம் மூலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது இப்படம்.
மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் இப்படம் ரீமேக்காக இருக்கிறது. இந்தியில் பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இப்படத்தினை தயாரித்து, இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கு திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினை திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.