ஏப்ரல் 18-ம் தேதி தள்ளிப் போனது தெனாலிராமன்

ஏப்ரல் 18-ம் தேதி தள்ளிப் போனது தெனாலிராமன்
Updated on
1 min read

'நான் சிகப்பு மனிதன்' படத்துடன் வெளியாகவிருந்த 'தெனாலிராமன்' திரைப்படம் ஒரு வாரம் இடைவெளி விட்டு ஏப்ரல் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.

விஷால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'நான் சிகப்பு மனிதன்', வடிவேலு நடிப்பில் தயாராகி இருக்கும் 'தெனாலிராமன்' ஆகிய இருபடங்களும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

'நான் சிகப்பு மனிதன்' படம் தொடங்கப்பட்ட போதே, ஏப்ரல் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி 'கோச்சடையான்' வெளியாகும் என்று எதிர்பாக்கப்பட்ட போது, படம் எப்போது வெளியாகும் என்பது இன்னும் தெரியாமல் இருக்கிறது.

வடிவேலு நடிப்பில் தயாராகி இருக்கும் 'தெனாலிராமன்' படத்தின் பணிகள் முடிந்து, சென்சாரும் முடிவடைந்து விட்டது. இதனால் 'நான் சிகப்பு மனிதன்' படத்துடன் 'தெனாலிராமன்' படமும் வெளியாகும் சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் யு.டிவி தென்னந்திய மேலாளர் தனஞ்செயன், 'தெனாலிராமன்' தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் பேசி படம் ஒரு வாரம் இடைவெளி விட்டு வெளிவந்தால் நன்றாக இருக்கும். இரண்டும் ஒரே நாளில் வெளிவந்தால் இரு படங்களின் வசூலும் பாதிக்கும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் 'தெனாலிராமன்' பட ரிலீஸை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

'தெனாலிராமன்' படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in