சிலோன் அனுபவங்கள் : எடிட்டர் சுரேஷ்

சிலோன் அனுபவங்கள் : எடிட்டர் சுரேஷ்
Updated on
1 min read

தமிழ் திரையுலகினர் பலரும் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சிலோன்', (தமிழில் 'இனம்' ) என்கிற படத்தினை பெரிதும் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

இது இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட ஒரு அகதிப் பெண்ணைப் பற்றிய கதை. இப்படத்தை போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படத்திற்கு தமிழக அரசிடமிருந்து வரி விலக்கும் கிடைத்திருக்கிறது.

இப்படத்தின் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ், “'சிலோன்' படத்தை படமாக்கிய விதத்தில் நிறைய விஷயங்களை உடைத்திருக்கிறார் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

நிறைய இயக்குநர்கள், எந்த காட்சி எல்லாம் அழகாக இருக்கிறதோ அதனை படத்தில் இணைக்க சொல்வார்கள். ஆனால் இப்படத்தினை எடிட் செய்யும் போது, சந்தோஷ் சிவன் பார்க்க அழகாக இருக்கும் அனைத்து காட்சிகளையும் எடுத்துவிடும்படி தெரிவித்தார்.

நிறைய காட்சிகள் மொபைல் போன் மற்றும் வீடியோ கேமிராவில் எடுத்தது போன்று இருக்கும். அநேக படங்களில் இருக்கும் காட்சிப்படுத்தும் முறையை உடைத்திருக்கிறார் சந்தோஷ் சிவன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படம் ஜனவரி 2014-ல் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in