என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல்

என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி: உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல்
Updated on
2 min read

‘எனது பெயருக்கும், புகழுக் கும் களங்கம் ஏற்படுத்தும் நோக் கத்திலும், விளம்பரத்துக்காகவும் லிங்கா படத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை ஏற்றால் பெரியளவில் இழப்பு ஏற்படும்’ என நடிகர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் லிங்கா திரைப் பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் ஆகி யோர் ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலை யில் இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமார் வாதிட்டார். நடிகர் ரஜினி காந்த், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகி யோரின் பதில் மனுக்களை அவர் களது வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்ப தாவது: இந்த மனுவை மனு தாரர் கெட்ட எண்ணம் மற்றும் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் தெரிவித் துள்ள அனைத்து குற்றச்சாட்டு களையும் மறுக்கிறேன். இந்த மனு ஏற்கத்தக்கதல்ல. மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

லிங்கா படத்தின் மதுரை, ராம நாதபுரம், விருதுநகர், செங்கல் பட்டு மாவட்ட விநியோகஸ்தர் என என்னை மனுதாரர் குறிப் பிட்டுள்ளார். இது தவறு. லிங்கா படத்தில் நான் நடிக்க மட்டுமே செய்கிறேன்.

விநியோகஸ்தர் என்ற அடிப் படையில் என்னை மனுவில் சேர்த் திருந்தால், மற்ற மாவட்ட விநி யோகஸ்தர்களை சேர்க்காமல் விட்டதில் இருந்து மனுதாரரின் கெட்ட எண்ணம் தெரிகிறது.

நான் திரையுலகில் 40 ஆண்டுக் கும் மேலாக உள்ளேன். அனுபவ முள்ள முன்னணி நடிகர், எழுத் தாளர், பாடகர், கதாசிரியர் என பல துறைகளில் பணியாற்றுகிறேன். எனது திரையுலக பணியை அங்கீகரித்து மத்திய, மாநில அரசுகள் பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் தந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளேன். ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளேன். உலகம் முழு வதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். எனது பெயருக்கும், புகழக் கும் களங்கம் ஏற்படுத்தும் நோக் கத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் பற்றியோ, மனுதாரர்தான் அந்தப் படத்தின் உரிமையாளர், இயக்கு நர், கதாசிரியர் என்பதும் எனக்கு தெரியாது. முல்லைவனம் 999 கதையும், முல்லைவனத்தின் கதை ‘யு டியூப்பில்’ வெளியானதும் தெரி யாது.

மனுதாரர் அவராகவே கற்பனை செய்துகொண்டு குற்றச்சாட்டு களை அடுக்கியுள்ளார். லிங்கா படத்தின் கதை என்ன? காட்சி கள் எப்படி உள்ளன எனத் தெரி யாமலேயே, கதையை திருடிய தாக எப்படி கூறினார் எனத் தெரிய வில்லை. வெறும் யூகத்தின் அடிப் படையில் கதையை திருடியதாகக் கூறியுள்ளார்.

லிங்கா படத்தை கடுமை யான முயற்சி, கூட்டு முயற்சி மற்றும் மிகச் சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களுடன் தயாரித் துள்ளோம். படம் விரைவில் வெளியாக உள்ளது. லிங்கா படம் வெளியாவதை உலகம் முழு வதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவற்றைப் பற்றி கவலைப் படாமல் விளம்பரத்துக்காக மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் கோரிக்கை ஏற்கப் பட்டால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இந்த வழக்கில் தேவை யில்லாமல் என்னை சேர்த்துள்ள னர். இதற்காக மனுதாரரிடம் இழப் பீடு கேட்டு வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தனது பதில் மனுவில், ‘சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். பல கோடி ரூபாய் முதலீடு செய்து லிங்கா படத்தை தயாரித்துள்ளேன். படப்பிடிப்புகள் முடிந்து படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர், மனுவுக்கு தமிழக டிஜிபி மற்றும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவ. 24-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முல்லை பெரியாறு கதைக்கு உரிமை கோர முடியாது

ரஜினிகாந்த் தனது பதில் மனுவில் மேலும் கூறுகையில், பென்னிகுக் மற்றும் முல்லை பெரியாறு அணை வரலாறு குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. இதற்கு தனிப்பட்ட முறையில் யாரும் உரிமை கோர முடியாது. அந்த கதைகளுக்கு மனுதாரர் தான் உரிமையாளர் எனக் கூறுவதை ஏற்க முடியாது. சினிமாவில் கதை திருட்டு புகார் வந்தால், சம்பந்தப்பட்ட இரு படங்களிலும் தொடர்ச்சியாக 13 காட்சிகள் ஒன்றுபோல் இருந்தால் மட்டுமே கதையை திருடியதாக அர்த்தம். இவ்வாறு இல்லாத சூழலில் முல்லைவனம் படத்தின் பதிப்புரிமையை திருடியதாக எப்படி கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in