

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக், ஜூலை முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் 10 நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இதுவரை இப்படத்தின் சூர்யாவின் லுக், பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட எதையுமே படக்குழு வெளியிடவில்லை. தந்தையர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இனிப்பான, வலுவான அப்பா - மகன் உறவு காட்சிகள் இருக்கிறது. ஜூலை முதல் வாரத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகும்" என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களை பெரும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா.