ஜெயம் ரவியின் வனமகன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜெயம் ரவியின் வனமகன் பர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'வனமகன்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'போகன்'. படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'வனமகன்' மற்றும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.

இப்படங்களில் 'வனமகன்' படத்தின் பணிகள் பெரும்பாலானவை முடிந்துவிட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. சாயிஷா சைகல் நாயகியாக நடித்து வரும் இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

தமிழகத்தில் உள்ள அடர்ந்த காடுகள், திருப்பதி, பாங்காக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது படக்குழு. 'பேராண்மை' படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

'வனமகன்' படத்தில் ஜெயம் ரவியின் லுக் அடங்கிய போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று (பிப்ரவரி 6) மாலை இப்படத்தின் டீஸரை இணையத்தில் வெளியிடவும் உள்ளது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in