

2014ல் தான் 'கோச்சடையான்' வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.
இந்தியாவில் வெளிவரும் முதல் முழுமையான MOTION CAPTURE TECHNOLOGY படம் என்பதால் படத்தினை கிராபிக்ஸ் வல்லுனர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் பணிகள் முடிந்து, படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதற்கு சாத்தியமில்லை என்றும், அடுத்தாண்டு ஆகலாம் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
'எங்கே போகுதோ வானம்' என்று எஸ்.பி.பி பாடிய பாடல், படத்தின் டீஸர் ஆகியவை வெளியாகி விட்டன. வெளியான டீஸரின் முடிவில் இசை வெளியீடு அக்டோபர் 2013 என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆனால், அக்டோபர் மாதம் படத்தின் இசை வெளியாகவில்லை. உடனே இசை வெளியீட்டை நடத்தி, ரஜினி பிறந்தநாளன்று படத்தினை வெளியிட சாத்தியமில்லை. ரஜினி பிறந்தநாளன்று படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வெளியிடலாம் என்று ஆலோசித்து வருகிறார்களாம்.
படத்தினை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமாம். ரஜினி ரசிகர்கள் இச்செய்தியால் சற்றே சோர்ந்து போயிருக்கிறார்கள்.