

ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, விவேக் நடித்துள்ள 'பிருந்தாவனம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, விவேக், தான்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிருந்தாவனம்'. படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஷான் சுதர்சன் தயாரித்து வருகிறார்.
மே மாதத்தில் வெளியிட இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இப்படத்தின் கதைக்களம் குறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது, "நடிகருக்கும், ரசிகனுக்கும் இடையேயான உறவுதான் கதை. விவேக் நடிகராகவும், அருள்நிதி ரசிகராகவும் நடித்துள்ளனர்.
காது கேட்காத - வாய் பேச முடியாத நபராக அருள்நிதி நடித்துள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து, இறுதியில் உணர்ச்சிகரமாகவும் சில காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் ராதாமோகன். அருள்நிதி - விவேக் இருவரும் படம் முழுக்க இணைந்தே இருப்பார்கள்" என்று தெரிவித்தார்கள்.