

சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் ஜீவா.
‘என்றென்றும் புன்னகை’, ‘யான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. அதனைத் தொடர்ந்து ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்ற படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ஜீவா.
தற்போது சமுத்திரக்கனி, ஜெயம் ரவி, அமலா பால் நடித்து வரும் ‘நிமிர்ந்து நில்’ படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தினைத் தொடர்ந்து ஜீவா நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தினைத் இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
’நிமிர்ந்து நில்’ ஜெயம் ரவி இருவேடங்களில் நடித்து வரும் படம் என்பதால், படத்தின் பணிகள் அதிகமாக இருக்கிறது. ஒரு வேடத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. மற்றொரு வேடத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. முதன் முறையாக 40 வயதுக்காரராக வில்லன் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. இவ்வேடத்திற்கான பணிகளில் தற்போது இருந்து வருகிறார்.
’நிமிர்ந்து நில்’ பணிகள் முழுவதுமாக முடிந்தவுடன், ஜீவா நடிக்கவிருக்கும் படத்தினை இயக்கவிருக்கிறார் சமுத்திரக்கனி. தயாரிப்பாளர் யார், ஜீவாவுடன் வேறு யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் போன்ற எதுவுமே இன்னும் முடிவாகவில்லை.
படப்பிடிப்பு துவங்க இன்னும் காலமாகும் என்பதால், இது குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.