சாமி 2 அப்டேட்: வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை

சாமி 2 அப்டேட்: வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை
Updated on
1 min read

'சாமி 2' படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு.

'ஸ்கெட்ச்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சாமி 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம். ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். ஹரி இயக்கவுள்ள இப்படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.

'சாமி 2' படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விக்ரமுக்கு வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இயக்குநர் ஹரி. படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். ஜூலையில் 'சாமி 2' படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'கருப்பன்' படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in