சீமான் - ஜி.வி.பிரகாஷ் இணையும் கோபம்

சீமான் - ஜி.வி.பிரகாஷ் இணையும் கோபம்
Updated on
1 min read

சீமான் இயக்கத்தில் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு 'கோபம்' என பெயரிடப்பட்டுள்ளது.

'பாஞ்சாலங்குறிச்சி', 'இனியவளே', 'வீரநடை', 'தம்பி', 'வாழ்த்துகள்' ஆகிய படங்களை இயக்கியவர் சீமான். அதற்குப் பிறகு அரசியலில் கவனம் செலுத்திய சீமான் தற்போது நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக, சீமான் 'பகலவன்' படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதில் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு என கதாநாயகர்களின் பட்டியல் மாறிக்கொண்டே வந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இயக்கும் புதிய படத்தை சீமான் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு 'கோபம்' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கவிருக்கும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள '4ஜி', 'செம', 'அடங்காதே' மற்றும் 'ஐங்கரன்' உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'நாச்சியார்' படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு சீமானின் 'கோபம்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in