

யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்து வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது.
சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்த வடிவேலு, மீண்டும் 'தெனாலிராமன்' படத்தின் மூலம் திரும்பியிருக்கிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வடிவேலுவுடன் மீனாட்சி தீக்ஷித், மனோபாலா, மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
அரங்குகள் மட்டுமன்றி குற்றாலம், அச்சன்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் யுவராஜ். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. ஏப்ரலில் படத்தினை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.