

தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரெஜினா கஸாண்ட்ரா. இவர் நடித்துள்ள ‘மாநகரம்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அவருடன் பேசியதில் இருந்து..
ஒவ்வொரு படத்திலும் தவறான நாய கனை காதலிப்பது, பின்னர் திருத்துவது என நாயகிகள் நடிக்கிறார்களே..
நிஜ வாழ்க்கையில் நடப்பதுதானே இது. கோபப்படுவது, உணர்ச்சிவசப் படுவது, பொறுப்பின்றி இருப்பது என ஏதாவது ஒரு தவறான குணம் எல் லோரிடமும் இருக்கும். அதுதான் சினிமா வில் காட்டப்படுகிறது. எல்லோரையும் நல்லவர்களாகவே வைத்து படம் எடுத்தால், கதையும் நகராது, சுவா ரசியமும் இருக்காது. சில கதாபாத் திரங்கள் எதிர்மறையாக இருந்தால்தான் திரைக்கதை பின்னல்கள் சரியாக வரும்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் குறித்து..
ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் ‘மரியம்’ கதாபாத்திரத்தில் நடித்துள் ளேன். அங்கிருந்து வேலைக்காக ஒரு வீட்டுக்குச் செல்வேன். அங்கு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்தது. அதுபோல இன்னும் நிறைய படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. ஒரே வசனத்தை ஒரு வீட்டுக்குள் 108 இடங் களில் பேசி நடித்துள்ளேன். அக்காட்சியை ஒரு மணி நேரத்தில் முடித்தோம்.
மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன். ஒவ்வொரு காட்சியும் மிகவும் கச்சிதமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவார். அவர் நினைத்தது வராமல் அடுத்த காட்சிக்கு செல்ல மாட்டார். வேறொரு படப்பிடிப்பு முடிந்து வரும்போது, இந்த கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் உடனே பிடிபடாது. அப்போது சொதப்பினால், ‘என்னம்மா.. இப்படி நடிக்கிற’ என்பார். பிறகு முழுமையாக விவரிப்பார். புரிந்துகொண்டு சரியாக நடித்துவிடுவேன். உடனே பாராட்டுவார். கச்சிதமான இயக்குநர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து..
தொடர்ச்சியாக அதுபற்றி பலரும் கருத்து கூறுகிறார்கள். அதனால், மேலும் மேலும் அதுபற்றி பேச விரும்பவில்லை. ஒரு பெண்ணுக்கு தவறு நேர்ந்த பிறகு, அதைப் பற்றி அறைக்குள் உட்கார்ந்துகொண்டு பேசுவதும், விவாதிப்பதும் முறை யல்ல. ஒரு விஷயத்தைப் பற்றி பேசு வது எளிது. நடவடிக்கை எடுப்பது தான் கஷ்டம். இது மிக முக்கியமான விஷயம். அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்காமல், இனி இது போல நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாண வேண்டும்.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சந்தித்த அருவருப்பான விஷ யத்தை கூறுகிறேன். ஹைதராபாத்தில் தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டி ருந்தேன். தமிழ் திரையுலகில் இருந்து ஒருவர் போன் செய்து படத்தின் கதை யைக் கூறிவிட்டு, ‘நீங்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து போகவேண்டும்’ என்றார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அந்தப் படத்தில் நடிக்காமல் தவிர்த்துவிட்டேன். யார் பேசியது என்று ஞாபகம் இல்லை.
பாலியல் துன்புறுத்தல் குற்ற வாளிகளுக்கு கண்டிப்பாக மரண தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங் கள் தொடராது. நாமும் முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும். அது நம் கைகளில்தான் உள்ளது.