கரகாட்டக்காரன் தயாரிப்பாளர் காலமானார்

கரகாட்டக்காரன் தயாரிப்பாளர் காலமானார்

Published on

'கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி இன்று (டிச. 20) காலமானார். அவருக்கு வயது 73.

தமிழ் திரையுலகில் பலராலும் கொண்டாடப்பட்ட படம் 'கரகாட்டக்காரன்'. தற்போது டிவியில் இப்படம் திரையிடும் போதும் கண்டுகளிக்கப்படுகிறது.

'கரகாட்டக்காரன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் கருமாரி கந்தசாமி. திரையுலகில் பலரிடம் நட்பாகப் பழகக் கூடியவர்.

கருமாரி கந்தசாமி இன்று காலை சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in