

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தற்போதைய தமிழ்த் திரையுலக சூழலில், ஓசைப்படாமல் பல படங்களை ஒப்புக் கொண்டு, தன் வேலையை கவனமாகச் செய்து வருகிறார் ஹன்சிகா.
ஆரம்பகாலத்தில் ஹன்சிகாவின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹன்சிகா மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் அதிக படங்களைக் கைப்பற்றினார். விஜய்யோடு ‘வேலாயுதம்’, ஆர்யாவோடு ‘சேட்டை’, உதயநிதியோடு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என முன்னேறியவர், சிவகார்த்திகேயனோடு ‘மான் கராத்தே’ வரை ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவியோடு ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடித்தார். அப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கவிருக்கும் படத்தில் இப்போது ஜெயம் ரவியோடு மீண்டும் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா.
முன்னணி நடிகர்களுடன் வரிசையாக படங்களை ஒப்புக் கொண்டு, எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும் திட்டமாம் ஹன்சிகாவிற்கு.