

'ஜில்லா' படத்தின் தீபாவளிக்கு டிரெய்லரும், பொங்கலன்று படமும் வெளியாகும் என அறிவிப்பு.
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிக்க, நேசன் இயக்கிவரும் படம் 'ஜில்லா'. இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார்.
படப்பிடிப்பு துவங்கும் முன்பே இப்படத்தின் டிவி உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கிவிட்டது.
விஜய் - மோகன்லால் முதல் முறையாக இணைந்து நடிப்பதால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை இப்படத்தின் FIRST LOOK போஸ்டர்கள், டிரெய்லர் என எதுவுமே வெளியாகவில்லை.
விஜய் பாடியிருக்கிறார், கேரளா உரிமையை மோகன்லால் வாங்கியிருக்கிறார், பாடல்களுக்காக ஒசாகா செல்ல இருக்கிறார்கள் என படத்தினைப் பற்றி பல்வேறு செய்திகள் வெளியானாலும் டிரெய்லர் என்றைக்கு என்பதும், படம் எப்போது வெளியாகும் என்பதும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பை கவனித்து வரும் ஜித்தன் ரமேஷ், "'ஜில்லா' படத்தின் டிரெய்லர் தீபாவளியன்று (நவம்பர் 2) வெளியாகும். படம் பொங்கல் 2014ல் வெளியாகும்" என்று அறிவித்திருக்கிறார்.
இதுவரை படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது, ஜித்தன் ரமேஷின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினைக் கொடுத்திருக்கிறது.