கெளரவ் - உதயநிதி இணையும் படப்பிடிப்பு துவக்கம்

கெளரவ் - உதயநிதி இணையும் படப்பிடிப்பு துவக்கம்
Updated on
1 min read

கெளரவ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 15) முதல் துவங்கப்பட்டு இருக்கிறது.

'மனிதன்' படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது காரைக்காலில் நடைபெற்று வந்தது.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. அப்படத்தைத் தொடர்ந்து கெளரவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

இதில் மஞ்சிமா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in