ஆகஸ்ட் 21ம் தேதி பகத் - நஸ்ரியா திருமணம்

ஆகஸ்ட் 21ம் தேதி பகத் - நஸ்ரியா திருமணம்
Updated on
1 min read

நடிகர் பகத் பாசில் - நஸ்ரியா இருவருக்கும் ஆகஸ்ட் 21ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் பகத் பாசிலுக்கும், நஸ்ரியாவிற்கும் 2014ல் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக அறிவித்தார்கள்.

திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ்விவாண்டா அரங்கில் பகத் - நஸ்ரியா திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமக்கள் வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

நடிகை நஸ்ரியா–நடிகர் பகத் பாசில் திருமணம் வருகிற ஆகஸ்டு 21ம் தேதி திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் உள்ள அன்சாஜ் கன்வென்சன் சென்டரில் நடைபெற இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in