

தன்னுடைய தயாரிப்பில் உருவாகி வரும் 'ரங்கூன்' ஜூன் 9-ம் தேதி வெளியாகும் என ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ரங்கூன்'. ராஜ்குமார் பெரியசாமி இயக்க கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விக்ரம் இசையமைத்துள்ளார்.
இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. தற்போது இதன் இறுதிகட்ட பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.
"ஜூன் 9-ம் தேதி எனது உதவி இயக்குநர் ராஜ்குமார் இயக்கியுள்ள 'ரங்கூன்' வெளியாகும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் புதிய படம் ஜூன் 23-ம் தேதி வெளியீட்டை உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.