துருவங்கள் 16 படக்குழுவினவருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு

துருவங்கள் 16 படக்குழுவினவருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு

Published on

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'துருவங்கள் 16' படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது.

விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தற்போது இப்படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். "துருவங்கள் 16 - சிறப்பாக எடுக்கப்பட்ட, தொழில்நுட்ப ரீதியில் வலுவான படம். இளம் தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்து வந்துள்ள அற்புதமான படைப்பு. நடிகர் ரகுமான், இயக்குநர் கார்த்தி உள்ளிட்ட மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும், 'துருவங்கள் 16' இயக்குநர் கார்த்திக் நரேன் உள்ளிட்ட படக்குழுவினரையும் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ஷங்கரின் பாராட்டைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்ற, தற்போது முன்னணி நிறுவனம் ஒன்று முன்வந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in