

ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படாதது ஒரு துரதிர்ஷ்ட வசமானது என்று அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் இன்று மேலும் ஒரு அதிரடி திருப்பத்தை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கிறது. தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது.
காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை சுற்றிலும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து அரவிந்த்சாமி "மக்களுடைய உணர்வுகளை எம்.எல்.ஏக்கள் பிரதிபலிக்கவில்லை என்றால் நம்பிக்கை வாக்கெடுப்பை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்கு மக்களை அவர்கள் சந்திக்க வேண்டும், விடுதியில் கட்சியினரை அல்ல.
ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்படாதது ஒரு துரதிர்ஷ்ட வசமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் மட்டுமே காட்டப்படுகின்றன. என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.