

சிரிஷ் நாயகனாக நடிக்கும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தில் பூஜா தேவரியாவுக்கு பதிலாக சாந்தினி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'மெட்ரோ' படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் சிரிஷ். அப்படத்தைத் தொடர்ந்து தரணீதரன் கூறிய கதை பிடித்துவிடவே தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார்.
'ராஜா ரங்குஸ்கி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு முதலில் பூஜா தேவரியா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் பூஜையிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உடன் உடல்நிலை சரியில்லாமல் போகவே படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சாந்தினி ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
யுவன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை பர்மா டாக்கீஸ் மற்றும் வாசன் தயாரிப்பு நிறுவனம் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.