கோகுல் - விஜய் சேதுபதி இணையும் ஜுங்கா

கோகுல் - விஜய் சேதுபதி இணையும் ஜுங்கா
Updated on
1 min read

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கவுள்ள படத்துக்கு 'ஜுங்கா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகளைத் தொடங்கினார் இயக்குநர் கோகுல். அப்படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் 2-ம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக இயக்குநர் கோகுல் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த படத்தின் ஒப்பந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இதற்கு 'ஜுங்கா' என தலைப்பிட்டுள்ளார்கள்.

நாயகியாக ஏமி ஜாக்சன் நடிப்பார் என்றும், முக்கியமான காட்சிகள் அனைத்தும் வெளிநாட்டில் படமாக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in