கோலி சோடா படக்குழு பணம் தரவில்லை : பவர் ஸ்டார் சீனிவாசன்

கோலி சோடா படக்குழு பணம் தரவில்லை : பவர் ஸ்டார் சீனிவாசன்
Updated on
1 min read

'கோலி சோடா' படத்தில் நடனமாடியதற்கு, மீதிப்பணத்தினை தரவில்லை என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

‘இன்றைய சினிமா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் இசையை பவர் ஸ்டார் சீனிவாசன் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பெற்றுக் கொண்டார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பவர் ஸ்டார், "‘கோலிசோடா’ படத்திற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதில் நான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி அழைத்தார்கள்.

6 நாட்கள் தேதிகள் கேட்டு, பின்பு 3 நாட்களிலேயே முழு பாடலையும் எடுத்து முடித்துவிட்டார்கள். நான் அந்த டான்ஸ் சீன்ல நடிச்சப்போ என் புகைப்படங்கள எல்லாம் வெளியிட்டு விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் படம் ரிலீஸாகி வெற்றிபெற்றது, என் புகைப்படத்தினை போடவே இல்லை. அப்பாடலில் நடனமாடுவதற்காக பேசிய பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்த தயாரிப்பாளர்கள்.. இன்னமும் மீதிப்பணத்தினை தரவில்லை.

யார்கிட்ட வேணுமானாலும் போய் சொல்லு பணத்தை தர முடியாது என்று கூறுகிறார்கள். எல்லாரும் என்னைத்தான் ஏமாத்துறவனா பாக்குறாங்க. ஆனா, நான் என் சொந்த உழைப்பில், கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்துல இந்தளவிற்கு முன்னேறியிருக்கேன். யாரையும் ஏமாத்தல. ஆனா எனக்கு நியாயமா சேர வேண்டிய பண பாக்கியை கொடுக்காமல் என்னைத்தான் சிலர் ஏமாத்தியிருக்காங்க” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in