மர்ம நபர் தாக்குதல்: மும்பை போலீஸிடம் ஸ்ருதிஹாசன் புகார்

மர்ம நபர் தாக்குதல்: மும்பை போலீஸிடம் ஸ்ருதிஹாசன் புகார்
Updated on
1 min read

மும்பையில் தன்னை தாக்கிய மர்ம நபர் மீது போலீஸிடம் புகார் அளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வருகிறார். தற்போது 'வெல்கம் பேக்' என்ற இந்தி படத்திலும், 'ரேஸ் கெளரம்' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த செவ்வாய்கிழமை அன்று, ஸ்ருதிஹாசன் மும்பை வீட்டில் இருந்தபோது மர்ம நபர் வீட்டிற்குள் வர முயற்சித்திருக்கிறார். உடனே ஸ்ருதிஹாசனை வீட்டுக் கதவினை அந்த நபர் முகத்தின் மீது மோதச் செய்து, அக்குடியிருப்பின் காவல்காரருக்கு தெரியச் செய்திருக்கிறார். காவலாளிகள் அந்த நபரை, அக்குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தாக்குதல் குறித்து ஸ்ருதி ஹாசன், போலீசில் புகார் அளிக்காமல் இருந்தார். தற்போது, தன்னை தாக்கிய மர்ம நபர் குறித்து மும்பையில் உள்ள பந்த்ரா போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

போலீசார் முதற்கட்டமாக, ஸ்ருதிஹாசன் தங்கியிருந்த குடியிருப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ பதிவை கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், அந்நபரின் முகம் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in