தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம்: கமல் வேதனை

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம்: கமல் வேதனை
Updated on
1 min read

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம் என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் விஷயங்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கமல்ஹாசன். தற்போது, "பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து. நாம் குற்றமறக் கடமையைச் செய்வோம். முடியுமா?.

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்துவிட வேண்டாம். உறுதியாகச் சொல்கிறேன், ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டுக்காக உள்நாட்டு போரில் ஈடுபடும். யாரும் சாகமாட்டார்கள், ஆனால் மூடர்கள் மட்டும் உயிரோடு மீள்வார்கள்.

சத்யராஜ்.. பெரியார் பெரியார்னு வாய் கிழியப் பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு டப்ஸ்மாஷாவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர், அப்புறம் தான் நடிகர்கள்" என்று தெரிவித்துள்ளார் கமல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in