

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரெமோ' படத்தில் வில்லனாக மலையாள நடிகர் அன்சன் பால் நடித்திருக்கிறார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெமோ'. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருப்பது யார் என்பதை படக்குழு வெளியிடாமல் இருந்தது. மலையாள நடிகர் அன்சன் பால் தான் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும், இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இருவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து படத்தை செப்டம்பர் 2ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.