

நீங்கள் வார்டு கவுன்சிலராக மாறி உங்கள் பகுதியில் ஏன் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது? என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் நிலவும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருபவர் பாடகி சின்மயி.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் 30-ம் தேதி நடக்கிறது. நீங்கள் ஏன் ஒரு வார்டு கவுன்சிலராக மாறி உங்கள் பகுதியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது? பங்குபெறுங்கள்.
மாற்றம் கொண்டு வாருங்கள். உண்மையான மாற்றம் இந்த அளவில் எடுத்து வர முடியும். மாநகராட்சி பள்ளிகள், வீதி விளக்குகள், கழிவறைகள் என அலுவலகத்தில் இருந்து கொண்டு சமூக சேவை செய்யலாம்.
நீங்கள் பங்கேற்கவில்லை என்றால் உங்கள் பகுதி கவுன்சிலர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பில் இருங்கள். நமக்கு உதவி செய்ய அவர்களுக்கு உதவுங்கள்” என்று தெரிவித்துள்ளார் சின்மயி.