சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி

சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி
Updated on
1 min read

நடிகை தமன்னா, 2005-ம் ஆண்டு வெளி​யான ‘சந்த் ஷா ரோஷன் செஹ்​ரா’ என்ற இந்தி படம் மூலம் சினி​மா​வில் அறி​முக​மா​னார். பிறகு தென்​னிந்​திய சினி​மாவுக்கு வந்த அவருக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் கிடைத்​தன. இப்​போது அவர் இந்​தி​யிலும் கவனம் செலுத்தி வரு​கிறார்.

சினி​மா​வில் 21 வருடங்​களைக் கடந்​துள்ள அவர் கூறும்​போது, “எனது திரை​யுலக வாழ்க்​கை​யில் 21 ஆண்​டு​கள் கடந்​து​விட்​டன. இருப்​பினும் நான் மீண்​டும் புதி​தாகத் தொடங்​கு​வதைப் போன்றே உணர்​கிறேன். பல நடிகர்​களுக்​கு, குறிப்​பாக நடிகைகளுக்கு இத்​தகைய வாய்ப்பு கிடைப்​ப​தில்​லை.

எனது படங்​கள் அடுத்​தடுத்து வெளி​யாக இருப்​ப​தால் உற்​சாகமாக இருக்​கிறேன். ரசிகர்​கள் என் மீது தொடர்ந்து அன்​பைப் பொழிந்து வரு​கிறார்​கள், என்னை அரவணைப்​புடன் ஏற்​றுக்​கொண்​டார்​கள். இதற்கு முக்​கிய காரணம், தென்னிந்​தி​யா​வில் எனக்​குக் கிடைத்த வரவேற்​பு​தான். இந்​தி​யா​வின் பிறபகு​தி​களில் இருந்​தும் எனக்​குக் கிடைத்து வரும் இந்த அன்பு உற்​சாகமாக உணர வைக்​கிறது. இதற்​குப் பதிலாக என்ன செய்ய முடி​யும் என்​ப​தற்கான வழிகளைத் தேடிக்​கொண்​டிருக்​கிறேன்” என்​றார்.

சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in