தமிழில் ரீமேக்காகும் உஸ்தாத் ஹோட்டல்

தமிழில் ரீமேக்காகும் உஸ்தாத் ஹோட்டல்

Published on

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'உஸ்தாத் ஹோட்டல்' திரைப்படம் தமிழில் 'தலப்பாக்கட்டி' என்னும் பெயரில் ரீமேக்காகிறது.

’உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை அன்வர் ரசீத் இயக்க, துல்ஹர் சல்மான், திலகன், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றது.

தற்போது இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் இப்படத்தினை தயாரித்த ஸ்டீபன், ராதிகா சரத்குமாருடன் இணைந்து இப்படத்தினை தமிழில் தயாரிக்கிறார். முன்னர், இதே கூடடணி இணைந்து ’சென்னையில் ஒரு நாள்' படத்தினை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் விக்ரம்பிரபு, ராஜ்கிரண், தம்பி ராமையா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.

‘கழுகு’ படத்தினை இயக்கிய சத்யசிவா, இப்படத்தினை இயக்கவிருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in