

சமுத்திரகனி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தொண்டன்' படத்தில் ஜெயம் ரவியுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் அல்லரி நரேஷ்.
சமுத்திரகனி இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் 'அப்பா'. ஜூலை 1ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. 'அப்பா' படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் சமுத்திரகனி.
'தொண்டன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் அல்லரி நரேஷ். சமுத்திரகனி இயக்கிய 'போராளி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அல்லரி நரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜெயம் ரவியுடன் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வானவுடன் படத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.