

தரணி - விக்ரம் இணையும் படத்தில் நாயகியாக நடிக்க முடியாது என்று விலகிவிட்டார் ஹன்சிகா.
'அரண்மனை', 'வாலு', 'வேட்டை மன்னன்', 'பிரியாணி', 'மான் கராத்தே' என தமிழில் ஹன்சிகாவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. அதுமட்டுமன்றி தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
'தில்', 'தூள்' வெற்றிக் கூட்டணியான விக்ரம் - தரணி இருவருமே மீண்டும் 'ராஸ்கல்' என்ற படத்தின் மூலம் இணையவிருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி முதல் தொடங்கவிருக்கிறது. தற்போது நாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
நாயகி வேடத்திற்கு ஹன்சிகாவை அணுகியிருக்கிறார்கள். அவரோ 'ஸாரி.. அடுத்த 6 மாசத்துக்கு கால்ஷீட் இல்லை' என்று கூறிவிட்டாராம்.
இதனால் தற்போது மற்ற முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.