திருட்டு விசிடியால் திரையுலகுக்கு பாதிப்பு என்பது 10% தான்: இயக்குநர் பாக்யராஜ்

திருட்டு விசிடியால் திரையுலகுக்கு பாதிப்பு என்பது 10% தான்: இயக்குநர் பாக்யராஜ்
Updated on
1 min read

திருட்டு விசிடியால் திரையுலகுக்கு பாதிப்பு என்பது 10% தான் என்று இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்தார்.

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரோஜா மாளிகை'. சென்னையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

"திருட்டு விசிடியால் திரையுலகுக்கு பாதிப்பு என்பது 10% தான். நாம் நல்ல படம் எடுக்க வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். 'மாநகரம்', '8 தோட்டாக்கள்' படங்கள் எல்லாம் எப்படி ஓடுகிறது. இப்படங்களை எல்லாம் பெரிய நடிகர்களை வைத்து உருவாக்கவில்லை. நல்ல படமெடுத்தால் கண்டிப்பாக அனைவருமே பேசுவார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய அணி வந்துள்ளது. உங்களை எல்லாம் பிடித்து ஓட்டுப் போட்டதாக நினைக்க வேண்டாம். நிறைய பிரச்சினைகள் உள்ளது, நீங்களாவது சரி செய்வீர்கள் என்றுதான் ஓட்டு போட்டுள்ளோம்.

பாகிஸ்தான்காரர்கள் என்றைக்காவது ஒரு நாள் தான் சண்டைக்கு வருவார்கள். ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் சண்டைதான் அதிகம். அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவது தான் மிகவும் முக்கியம்.

திரையரங்கு உரிமையாளர்களும் சிறு படங்களுக்கு திரையரங்குகள் கொடுத்து உதவி செய்ய வேண்டும். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சிறு பட்ஜெட் படங்களுக்கு காலை காட்சி ஒதுக்குகிறார்கள். பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே காலை காட்சிக்கு ரசிகர்களை உள்ளே இழுக்கும். சிறு பட்ஜெட் படங்களுக்கு மாலை காட்சிகள் ஒதுக்கினால் மட்டுமே கூட்டம் வரும்.

அதே போன்று எந்தவொரு கதைக்களத்தில் படம் எடுத்தாலும் நன்றாக இருந்தால் கண்டிப்பாக வெற்றியடையும்" என்று பேசினார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in