

'பாண்டிய நாடு' படத்திற்கு சென்சார் 'U/A' அளித்ததால் அதிர்ச்சியில் இருக்கிறது படக்குழு.
தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படங்களில் 'ஆரம்பம்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகியவற்றுக்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் சென்சார் அதிகாரிகள். 'பாண்டிய நாடு' படம் சென்சார் செய்யப்படாமல் இருந்தது.
நேற்று (அக். 21) சென்சார் அதிகாரிகளுக்கு அப்படத்தினை திரையிட்டு காட்டினார்கள். படத்தினைப் பார்த்த சென்சார் குழு படத்துக்கு 'U/A' சான்றிதழ் அளித்துவிட்டார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது.
ஏனென்றால் 'U/A' என்றால் அரசாங்கத்திடம் இருந்து வரிச்சலுகை கிடைக்காது. இதனால் படத்தினை இன்று Revising Committeeக்கு திரையிட்டு 'யூ' சான்றிதழ் வாங்க அனுப்பியிருக்கிறார்கள்.
வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்திற்கு 'U/A' சான்றிதழ் அளித்தார்களாம்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், சீக்கிரம் படத்திற்கு 'யூ' சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் சுழன்று வருகிறார்கள்.
இன்னும் 2,3 நாட்களில் சென்சார் சான்றிதழ் குறித்த விவரம் தெரியும்.