விஜய்யை இயக்கும் சிம்புதேவன்

விஜய்யை இயக்கும் சிம்புதேவன்

Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்

'ஜில்லா' படத்தினைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய். இப்படத்தினை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சமந்தா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் மேலாளர் செல்வக்குமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிப்பார் விஜய் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது விஜய் நடிக்கும் படத்தை சிம்புதேவன் இயக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. காமெடி கதையினை மிகவும் நேர்த்தியாக கையாண்டு அதில் வெற்றியும் பெற்றவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' பிப்ரவரியில் வெளியாக இருக்கிறது.

விஜய் - சிம்புதேவன் கூட்டணி முடிவாகி இருப்பது தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in