

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதல் தயாரிப்பான மதயானைக்கூட்டம் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மதுரையை கதையின் களமாகக் கொண்டுள்ள இந்தத் திரைப்படத்தை, விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஒவியா கதாநாயகியாக நடித்துள்ளார். ரகுனந்தன் இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஜே.எஸ்.கே ஃபில்ம் கார்பரேஷன் இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ஆம் தேதி மதயானைக்கூட்டம் வெளியாகிறது.