

சட்டப்பேரவையில் நடப்பதை நேரலையில் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது நிலவு சூழல் குறித்து உடனுக்குடன் கருத்துகள் தெரிவித்து வருபவர் அரவிந்த்சாமி. சட்டப்பேரவை நிகழ்வுகளின் வீடியோ பதிவை வெளியிட வேண்டும் என்று திமுக தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் வீடியோ தொகுப்பு குறித்து அரவிந்த்சாமி, "அது ஏன் அவர்கள் விருப்பமாக இருக்க வேண்டும்? ஏன் சபாநாயகரின் விருப்பமாக இருக்க வேண்டும்? மக்களுக்கு சட்டப்பேரவையில் நடப்பதைப் பார்க்க, எம்.எல்.ஏக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நேரலையில் பார்க்க, கேட்க உரிமை இருக்கிறது.
எந்த வித தொகுப்பும் இன்றி சட்டப்பேரவையில் நடப்பதை மக்கள் அப்படியே பார்க்க வேண்டும். மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருக்கிறதென்றால், என்ன நடக்கிறது என்று பார்த்து முடிவெடுக்கவும் உரிமை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.