

நடிகர் ரஜினிகாந்துடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி நேற்று ‘கபாலி’ படம் பார்த்தார்.
‘கபாலி’ படம் வெளியானபோது அமெரிக்காவில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில், தன்னுடைய நண்பரும் மூத்த பத்திரிகையாள ருமான சோ ராமசாமிக்காக ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சியை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் ரஜினி ஏற்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து, சோ தனது குடும்பத்தினருடன் நேற்று ‘கபாலி’ படம் பார்த்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட படக் குழுவினரும் படம் பார்த்தனர்.