

என்னை என் வேலையைச் செய்ய விடுங்கள் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது ரஜினி குறிப்பிட்டார்.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். நாளை (மே 28) முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார் ரஜினி.
தன் வீட்டிலிருந்து கிளம்பும் போது, வெளியே நின்ற பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசியதாவது "’காலா’ படப்பிடிப்புக்கு நாளை தொடங்கவுள்ளது. அதற்காக மும்பை செல்கிறேன். நடிப்பது என் தொழில். அதை கவனிக்கப் போய் கொண்டிருக்கிறேன். என்னை என் வேலையைச் செய்ய விடுங்கள்" என்று தெரிவித்தார்.
'காலா' படத்தில் ரஜினியோடு நடிக்க ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.