

'காலா' படத்தில் ரஜினியோடு நடிக்கவிருப்பவர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்களை தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
இன்று முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ரஜினியோடு நடிக்கவிருப்பவர்களை இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிக்காமல் இருந்தார்கள்.
படப்பிடிப்பு தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு கபிலன், உமாதேவி பாடல்களை எழுதுகிறார்கள். ஒளிப்பதிவு முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா என படக்குழுவினரையும் அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது படக்குழு.
மும்பையில் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவித்துள்ளது படக்குழு. ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஒரே இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தான். அவருக்குப் பின் இந்தப்பெருமையைப் பெற்றுள்ள இயக்குநர் பா.இரஞ்சித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.