

இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜா, புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார்.
டிசம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள விழாவிற்கு பாடல் பதிவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மலேசியாவில் இம்மாதம் 28-ம் தேதி நடைபெறவிருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில், அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகமே எனத் தெரிகிறது.